இன்றைய உலகம் நாம் உண்மை பேசினாலும் பொய் என்று சொல்கிறது. நாம் பொய் சொன்னால் கேலி கிண்டல் என புரிந்து கொள்கிறது. நாம் கேலி கிண்டல் செய்தால் அதை வெறுப்பாக பார்க்கிறது. அப்போது நாம் என்னதான் செய்ய வேண்டும். நாம் சொல்வதற்குத் தான் ஜவாப்தாரி அவர்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. நாம் என்றுமே நல்ல உண்மையான வார்த்தைகளையே பேசுவோம். வேறு எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாம் செய்யும் செயல் புண்ணிய கர்மம் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.
ஒருவர் ஏழையாக இருப்பதற்கும், மிடில் கிளாஸ் ஆக இருப்பதற்கும், பணக்காரராக இருப்பதற்கும் அவரவர் மனநிலையை காரணம். ஒரு ஏழை தனது மாத செலவுகளை ஈடுகட்ட தான் வேலைக்கு செல்கிறார். ஒரு மிடில் கிளாஸ் நபர் கௌரவமான வாழ்க்கைக்காக உழைக்கிறார். ஒரு பணக்காரர் தனக்கு கிடைக்கும் பணம் மேலும் பணத்தை சம்பாதிக்க வழிமுறைகளை தேடுகிறார், செய்கிறார். எல்லாவற்றிற்கும் நம் மனதிலேயே காரணம் என்பதை நாம் உணர முடிகிறது. எண்ணம் போல் வாழ்வு.
அடுத்தவருக்கு இருக்கும் திறமை நமக்கு இல்லாத போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. அதேபோன்று நம் திறமையை அடுத்தவர்கள் அங்கீகரிக்காத போதும் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த இரண்டுமே தவறாகும். நாம் திறமை இல்லை என்று புலம்பும் நேரத்தில் அதை விடுத்து திறமை வளர்க்க முயற்சி செய்வோமானால் நன்றாக இருக்கும். அதே போன்று நாம் எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களின் சர்டிபிகேட் காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களை சரி செய்து விட்டால் நம் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment