Posts

Showing posts from March, 2022

வாழ்க்கை ஒரு கரும்பு மாதிரி | எண்ணம் போல் வாழ்வு

 ஒரு நபர் அவர் நண்பர் கிட்ட வாழ்க்கை என்பது ஒரு கரும்பு மாதிரி அப்படின்னு சொல்றார் அதற்கு அந்த நண்பர் அது இனிக்கிர நாலயா என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் வாழ்க்கை நம்மல கரும்பு சக்கை போல பிழிந்து எடுப்பதனால  என்றார். உண்மை தாங்க வாழ்க்கை ஒரு கரும்பு போல தான். நேர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை இனிக்கும். எதிர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை கரம்ப சக்கைப்போல் பிழிந்து எடுத்துவிடும். நாம் நம் வாழ்க்கையை நேர்மறையாக பார்ப்போம் இனிப்பாக வைத்துக்கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

கச்சா பதாம் | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை போரடிக்குதா? வாழ்க்கையிலே thrill இல்லையா? அப்படி இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்க கத்துக்கங்க. வாழ்க்கை போரடிக்குது எப்படி ரசிப்பது என்று கேட்கிறீர்களா? கச்சா பதாம் ன்னு அப்படின்னு ஒரு பாட்டு வந்திருக்கு அதை புரிஞ்சா ரசிக்கிறோம். அதுபோல வாழ்க்கையை ரசிக்க கத்துக்கோங்க. சிலர பார்த்த உடனே பிடிக்கும். சிலர பழகப்பழக பிடிக்கும் வாழ்க்கையை வாழ வாழ பிடிக்கும், ரசிக்க ரசிக்க பிடிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Plastic surgeryக்கு‌ எவ்வளவு ஆகும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் டாக்டர் கிட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டார். அதற்கு டாக்டர் இரண்டரை லட்சம் ருபாய் ஆகும் என்று கூறினார். உடனே அந்த நபர் நாங்க பிளாஸ்டிக் தந்தா? உலகத்தில் இந்த மாதிரி அபத்தமாக பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகத்தில் எல்லோருக்கும் சில விஷயங்கள் தான் தெரியும் பல விஷயங்கள் தெரியாது. இதுதான் பொதுவான உண்மை. அதனால் நாம் அடுத்தவரின் அறியாமையை விமர்சனம் செய்ய வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

யார் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்றால் யார் நேற்றைய பற்றி கவலை இல்லையோ நாளை பற்றிய பயம் இல்லையோ அவர்களுக்கு தான். அவர்கள் நம் வாழ்க்கையே ஒரு நாடகம் என்பதை அறிந்திருப்பார்கள். பகவத் கீதை சொல்வது போன்று நேற்றும் நல்லது, இன்றும் நல்லது, நாளையும் நல்லது என்பதை நூற்றுக்கு நூறு சதவீதம் உணர்ந்திருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சமயோசிதமாக சிந்திப்பவரா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ம வாழ்க்கையில காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன், மழை அடிகும் நேரம் உப்பு விக்க போனேன் இப்படி பொலம்பிட்டு இருக்கக்கூடாது புத்திசாலித்தனமா மாவையும் உப்பையும் சேர்த்து போண்டா பண்ணி வித்து காசு பார்க்கணும். யாரு சமயோசிதமாக சிந்திக்கிறார்களோ அவங்களுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

எந்த அப்பா correct? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அப்பாவும் பையனும் ட்ரெயின்ல யாத்திரை செய்றாங்க, அப்போது ஜன்னல் வழியாக பார்க்கும் காட்சி ஒரு பையன் மாடு மேய்க்கிறான் அப்போது அப்பா சுமாராக படிக்கும் பையனிடம் நீ இந்த லட்சணத்தில் படிச்சா நீயும் மாடு மேய்க்க வேண்டியதான்னு சொல்றாரு. அடுத்த கம்பார்ட்மெண்டில் ஒரு அப்பா சுமாரா படிக்கிற பையன்கிட்ட நீ படிச்சு பெரிய ஆளாகி பெரிய பெரிய கண்டுபிடிப்பு செய்து இந்த மாடு மேய்க்கிறவங்களுக்கு உதவி செய்ற மாதிரி கருவிகள் கண்டுபிடிக்கணும்ன்னு சொல்றார். இதுல எந்த அப்பா correct  முதலாவதா இரண்டாவதா. இரண்டாவது தான் கரெக்ட் ஏன்னா எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் யார் குழந்தையை பராமரிக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தன் நண்பரிடம் அடுத்தவர் குழந்தையை பராமரிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? என கேட்கிறார். அதற்கு அந்த நண்பர் சிரித்துக்கொண்டே நீங்கள் யார் குழந்தையை பராமரிக்கிறீர்கள் எனக்கேட்டார். அதற்கு இவர் நான் என் மாமனாரின் மகளை பராமரிக்கிறேன் என உனக்கு தெரியாதா என கேட்டார். தாம்பத்திய வாழ்க்கை போர் அடிக்கிறது டென்ஷனாக இருக்கிறது என்று கூறுபவர்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பார்க்க தெரியாதவர்கள். வாழ்க்கையை சுவாரஸ்யமாக பாருங்கள் அப்போது உங்கள் வாழ்க்கை ஜிங்கிலாலா தான். எண்ணம் போல் வாழ்க.

வாழ்க்கை சொல்லித் தரும் பாடங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை நமக்கு சொந்தம் பந்தங்களை நேசிக்க கற்று தருகிறது. வாழ்க்கை அனுபவங்கள் நாம் யாரை நேசிக்க வேண்டும் யாரை நேசிக்கக் கூடாது என கற்றுக் கொடுக்கும். சூழ்நிலைகள் நம்மை யார் நேசிக்கிறார்கள் என்பதை காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சவாலும் நம்மை வீழ்த்த வரவில்லை நம்மை உயர்த்த வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.

இறைவனிடம் என்ன கேட்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி,  ஆரோக்கியம் தர வேண்டுகிறோம். ஆனால் நாம் என்ன கேட்டால் சரியாக இருக்கும். மகாபாரதத்தில் துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணனின் படயை கேட்டான். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை கேட்டான்.   போரில யார் ஜெயித்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். நம் வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் இறைவா என் கூடவே இருங்கள் எனக்கு தேவையான புத்தியும் பிரச்சினையை சமாளிக்க யுக்தியும் தாருங்கள் எனக் கேளுங்கள். அதற்கு பின் வெற்றி எப்படி வருகிறது என்பதை பாருங்கள். எண்ணம் போல் வாழ்வு.

Time vs Money | எண்ணம் போல் வாழ்வ

நாம் சிறிது நேரம் ஒதுக்கி கணக்கிட்டால் நம்மிடம் உள்ள பணத்தின் கையிருப்பு எவ்வளவு என சரியாக சொல்ல முடியும். ஆனால் நாம் நம் வாழ்க்கையில் இனி வரும் காலங்களில் எத்தனை நாள் வாழ்வோம் என சரியாக யாராலும் கூற முடியாது. நாம் ஒருவேளை பொருளாதாரத்தில் திவால் ஆகி விட்டால் இழந்ததை மீண்டும் சம்பாதிக்க முடியும், ஆனால் முடிந்துபோன நேரத்தை யாராலும் பயன்படுத்த முடியாது. அதனால் நல்ல காரியங்களை இன்றே இப்போதே செய்யுங்கள். எண்ணம் போல் வாழ்வு.

Hatha Yoga vs Raja Yoga | எண்ணம் போல் வாழ்வு

Image
ஆங்கிலத்தில் price, worth என்ற வார்த்தைகளுக்கு விலை என்று அர்த்தம். Priceless என்றால் விலைமதிப்பற்ற என்று அர்த்தம். Worthless என்றாள் விலைமதிப்பில்லாத அல்லது waste என்று அர்த்தம். Hatha யோகத்திலும் இராஜ யோகத்திலும் யோகம் என்ற வார்த்தை இருப்பதால் இரண்டும் ஒன்று போல் தோன்றும், ஆனால் அதற்கு இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. Hatha யோகா உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம். இராஜயோகம் உயிருக்கும் உயிரின் தந்தைக்கும் உள்ள சம்பந்தம். எண்ணம் போல் வாழ்வு. ------- Raja Yoga 7 Days Course - Video Playlist https://youtube.com/playlist?list=PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ Raja Yoga 7 Days Course - Audio Playlist https://www.divine-connectionz.com/7-days-class-in-tamil-audio Raja Yoga 7 Days Course - Audio Podcast https://anchor.fm/jaishree-k Yennam Pol Vazhvu - Tamil Blog https://yennampolvazhvu.blogspot.com ------ Zoom Meeting Link* https://tinyurl.com/vani-zoom-class Meeting ID: 748 1554 4456 Passcode: OmShanti 🕰 *REGIONAL TIMING EVENING* 🔆UK: 12.15pm 🔆Europe: 02.45p

மாங்கொட்டையில் என்ன இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

Image
  நாம் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு அந்த மாங்கொட்டையை தூக்கி எறியலாம், ஆனால் அந்த மாங்கொட்டையை பூமியில் புதைத்தாள் அதிலிருந்து ஒரு மாமரம் வரும் அது நிறைய பழங்களைத் தரும். நம்மை இந்த உலகமே ஒன்றுக்கும் உதவாதவன் என்று நினைக்கலாம் ஆனால் அந்த மாங் கொட்டையில் ஒரு மாமரம் ஒளிந்து இருப்பது போல் நமக்குள் ஆயிரம் திறமைகள் ஒளிந்து இருக்கிறது என நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயமே நம்மைப் பற்றி தவறாக புரிந்து இருந்தாலும் நாம் நம்மைப் பற்றி சரியான புரிதலோடு இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

33% Rule என்னவென்று உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

Image
ஒரு நாளை இப்படி பிரித்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதாவது 33 சதவீத நேரம் நம்முடைய வயதில் குறைவானவர்களிடம் செலவிட்டு அவர்களுக்கு நமக்குத் தெரிந்த நல்லதை சொல்லிக் கொடுப்போம். அடுத்த 33 சதவீத நேரம் நம்முடைய செம பிராயம் உள்ளவர்களிடம் செலவழித்து அன்பு பாராட்டுவோம். அடுத்த 33 சதவீத நேரம் நம்மைவிட பெரியவர்களிடம் செலவிட்டு அவர்களிடமிருந்து அவளுடைய அனுபவ பாடங்களை கற்றுக் கொள்வோம். மீதமிருக்கும் ஒரு சதவீத நேரம் இறைவனை நினைவு செய்து நமது ஆத்மாவை சக்திசாலியாக ஆக்குவோம். எண்ணம் போல் வாழ்வு.

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

Image
எந்த ஒரு பிரச்சனைக்கும் மூன்று தீர்வு இருக்கிறது ஒன்று எது நடந்து இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு நடந்ததை மாற்ற முடிந்தால் மாற்றுவது. மூன்று மாற்ற முடியாததை அப்படியே விட்டு விடுங்கள்.  நாம் எப்பொழுதும் நம் சந்தோஷத்தை இழக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் எப்போதும் ஊக்கம் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

முயல் ஜெயிக்குமா? ஆமை ஜெயிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

Image
நாம் முயல் ஆமை பற்றிய கதையை கேட்டு இருப்போம். முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்? சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முயலோ ஆமையோ ஜெயிக்கும்,  ஆனால் எப்போதும் யார் தோற்பார்?  முயலாமை என்றுமே ஜெயிக்கவே ஜெயிக்காது. அதனால் நாம் எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்போம். ஒருநாள் அல்லது ஒருநாள் நாம் வெற்றியை கண்டிப்பாக அடைவோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு மக்கள் தரும் certificate என்ன?

Image
நாம் நம் நண்பர்களையும் உறவினர்களையும் தேடி போய் பார்க்கும் பழக்கம் இருக்கலாம், ஆனால் நம் நண்பர்களோ உறவினர்களோ நம்மை வந்து பார்க்காமல் இருக்கலாம். அதற்கு அவர்களுடைய ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம்.  ஆனால் நம்மை பார்த்து யாரும் இவர் அஹங்காரம் பிடித்தவர் என்று சொல்லாமல் பார்த்துக் கொள்வோம். நாம் இந்த பூமியில் வாழும் காலம் மிகக் குறைவே. அந்த காலத்தில் நாம் எல்லோரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?

Image
வெற்றிக்கும் தோல்விக்கும் சின்ன வித்யாசம் தான் இருக்கிறது. நாம் இது நம் கடமை என உழைத்தால் வெற்றி கிடைக்கும். வெறும் கடமைக்கான உழைத்தால் தோல்விதான் கிடைக்கும். என் வேலை என உணர்ந்து உழைத்தால் வெற்றி கிடைக்கும். ஏனோதானோ என உழைத்தால் தோல்விதான் கிடைக்கும். எத்தனை முறை விழுந்தாலும் அது தோல்வி அல்ல,  எழ மறுப்பதே தோல்வியாகும். எண்ணம் போல் வாழ்வு.

உங்க ஆர்வம் ஒன்னும் குறையலையே?

Image
நம்போ அதிகாலையில் எழுந்திருக்கிறுதுக்காகஆர்வமா அலாரம் வைக்கிறோம்.ஆனால் அதிகாலையில் அலாரம் அடிக்கும் போது ஆர்வமா எழுநதிருக்கிறோமா? எண்ணத்தில் இருக்கிற ஆர்வம் ஏன் செயல்ல வரமாட்டேங்குது. பொதுவா நமக்கு ஆர்வமா, ஊக்கம் உற்சாகம் இருக்குறவங்கள ரொம்ப பிடிக்கும். அதுபோல நம்பலே ஊக்கம் உற்சாகத்தோடு இருந்தா தான் நமக்கே நம்பள பிடிக்கும். அதனால சொல்லிலும் செயலிலும் ஆர்வமாக உற்சாகத்தோடு இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு Ego எவ்வளவு இருக்கு?

Image
  நம்ப ஒரு தவறு செய்தா அதை நண்பர் அதை சுட்டிக் காட்டினா, நாம் இவர் யாரு நமக்கு class எடுக்கிறதுன்னு எண்ணம் வந்துன்னா நமக்கு ஈகோ இருக்குனு அர்த்தம். அதே இவர் நம்ம மேல இருக்கிற அக்கரையில தான சொல்றாருன்னு புரிஞ்சுக்கிட்டா நமக்கு ஈகோ இல்லை. எண்ணம் போல் வாழ்வு

உங்கள் மனசாட்சியை மதிக்கிறீர்களா?

Image
  நம்பள்ள பலர் ஒரு தவறு செய்யும்போது பக்கத்துல அப்பா இருக்காங்களா அம்மா இருக்காங்களா மனைவி இருக்காங்களா குழந்தைகள் இருக்காங்களா அப்படி பார்த்து அவங்க இல்லன்னா அந்த தப்ப பண்ணிடுவோம். அதாவது நம்ம மனசாட்சிக்கு தெரியும் அது தப்பு தான்னு. ஏன் நம்ப மனசாட்சிக்கு பயப்படக்கூடாது. இனிமே நம்போ மனசாட்சிக்கு விரோதமான எந்த ஒரு செயலும் செய்யாமல் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு

சக மனிதனை எப்படி நடத்துகிறீர்கள்?

Image
ஒருவர் நம்மை தரக்குறைவாக நடத்துகிறார் என்றால் அது அவரது தவறாகும் அவருக்கு போதிய மன முதிர்ச்சி இல்லை என்று அர்த்தம், அதே போல நம்மால் வேறு ஒருத்தர் தரக்குறைவாக நடத்துகிறார் என்று உணர்ந்தால் நமக்கு மன முதிர்ச்சி இல்லை என்று அர்த்தம். நாம் சக மனிதனை மரியாதையுடன் நடத்துவோம். எண்ணம் சொல் செயல் மூலம் யாரையும் காயப்படுத்த வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

வியாபாரம் vs தானம்

Image
  வியாபாரத்தை தானமா பண்ணக்கூடாது. தானத்தை வியாபாரமா பார்க்கக்கூடாது. இந்த தகவலை புரியவைக்கும் காணொளியை பாருங்கள்.

அன்பு vs அஹங்காரம்

Image
  வாழ்க்கை என்பது அன்பு மற்றும் அஹங்காரத்திற்கு இடையே உள்ள சுவாரஸ்யமான விளையாட்டு. அன்பு நாம் தவறு செய்யா விட்டாலும், உறவுகள் மேம்பட நம்மை sorry சொல்ல வைக்கும். அகங்காரம் நாமே தவறு செய்து விட்டு அடுத்தவரை sorry சொல்ல எதிர்பார்க்கும். அன்பு உறவுகளை இணைக்கும் அஹங்காரம் உறவுகளை முறிக்கும். நாம் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவோம் அகங்காரத்தை ஜெயிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

அதிர்ஷ்டம் vs சாதனை

Image
 P ositive attitude இல்லாம கிடைக்கிற success luck அல்லது அதிர்ஷ்டம். ஏன்னா நாம்ப அதை எதிர்பார்க்கல. positive attitude ஒட கிடைக்கிற success achievement அல்லது சாதனை. ஏன்ன ஒரு எண்ணத்தை உருவாக்கினோம் அதுக்கு உழைக்கும் ஜெயித்தோம். உண்மையில் அதிஷ்டம் என்பது கடின உழைப்பு. நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும் வெற்றி தான் அதிர்ஷ்டம்‌. அதனால் கடின உழைப்பை நம்புவோம். எண்ணம் போல் வாழ்வு.

நேர்மறை எண்ணங்களின் பலன்

Image
  எப்போதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்காக நல்ல வெயில் கொளுத்துகிறது என்று இருக்கும்போது மழையில் அருமை தெரிய இது நடக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதேபோல மழை பெய்து வெள்ளக்காடாக இருக்கும்போது வெயிலின் அருமை புரிவதற்காக இது நடக்கிறது என புரிந்து கொள்ளலாம். அதனால் நம் வாழ்வில் எந்த நேரமும் நேர்மையாக சிந்தித்தால் நம் வாழ்வு முன்னேறுவதை நாம் உணரமுடியும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் ஊக்கம் உற்சாகம் குறையவில்லையே?

Image
  ஒரு வெற்றி அடைவதற்கு முன்னால் பல தோல்விகளை நாம் சந்தித்திருப்போம். ஒரு உண்மையான வெற்றி என்பது ஒரு தோல்விக்கும் அடுத்த தோல்விக்கும் இடையே ஊக்கம் உற்சாகம் இழக்காமல் இருப்பதே ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கிறதா?

Image
  நம் வாழ்வில் அதிசயம் நடக்க வேண்டுமென்றால் நாம் எதிர்பார்க்காத சம்பவங்களும் வாழ்வில் நடக்க வேண்டும். நமக்கு அதிசயம் வேண்டும் ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளது. உண்மையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் அதிசயம் ஏற்படும் முடியாது, அதனால் இறைவனிடம் வேண்டும் போது எது வேண்டுமானாலும் நடக்கட்டும் ஆனால் அதை எதிர்கொள்ளும் சக்தியும் அறிவும் தாருங்கள் என்று கேளுங்கள். அப்போது நம் வாழ்வில் அதிசயங்கள் நடப்பதை நாம் பார்க்கமுடியும். எண்ணம் போல் வாழ்வு

இன்றைய நாளை எப்படி கழித்தீர்கள்?

Image
  நம்மிடம் இருக்கும் பணத்தை இன்றே செலவு செய்யவேண்டும் என்பது கிடையாது. அதை நாளை அல்லது எப்போது வேண்டுமோ அப்போது செலவு செய்யலாம். ஆனால் இன்றைய வாழ்க்கையே நாளை வாழலாம் என்று இருக்கமுடியாது. இன்றைய நாளில் நேற்றைய சோகத்தை பற்றியோ நாளைய சிந்தனைகளிலோ வாழ்வது சரியாக இருக்காது. இன்று என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதை நல்லபடியாக பயன்படுத்துவோம். எண்ணம் போல் வாழ்வு

சந்தோஷமாக இருக்க 2 Tips

Image
  1st Tip - நாம் மூன்றாம் மனிதர்களைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளையும் தேவையற்ற பேச்சையும் பேசாமல் இருப்பது. 2 Top - நாம் மூன்றாம் மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன சிந்திப்பார்களோ நம்மைப்பற்றி என்ன பேசுவார்களோ என்று எண்ணி மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்த இரண்டு Tips follow செய்தால் நம் வாழ்வு சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் எப்படி பட்டவர்?

Image
  நம்மபள யாராவது பாராட்டினால் தலைகால் புரியாம நடந்துக்கிறதும், நம்மை யாராவது திட்டினால் மனம் உடைந்து போவதும் சரி இல்லை. எப்பவுமே நம்ப balanced அ இருக்கணும். நம்மை யாராவது புகழும்போது நம்ப பணிவாய் இருக்கணும். நம்மை யாராவது திட்டும்போது நாம் அது உண்மை இருந்தா நம்பள மாத்திக்கணும், அதில் உண்மை இல்லைன்னா நம்போ கவலைப்பட வேண்டியதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

எண்ணங்களில் உள்ள விஷத்தை நீக்குவது எப்படி?

Image
நாம் கெட்ட உணவை சாப்பிட்டோம் என்றால் அதை food poisoning என கூறுகிறோம். அதற்கு தகுந்த மருந்து சாப்பிட வேண்டும். நம் எண்ணங்களின் உணவு நாம் எதை பார்க்கிறோமோ எதைக் கேட்கிறோமோ எதைப் படிக்கிறோமோ அதை பொறுத்து. எண்ணங்களில் விஷம் உள்ளே போனால் அதற்கான மருந்து என்ன? அதற்கு நாம் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் நல்ல விஷயங்களைப் படிக்க வேண்டும், ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

Anger ரொம்ப Danger

Image
  கோபம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது. நாம் ஒருவர் மேல் கோபப்பட்டால் நம்முடைய உறவு பாதிக்கப்படும் நாம் கோபப்படவில்லை என்றால் நம்முடைய உடலில் enzyme உற்பத்தியால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதற்கான தீர்வு நாம் வாழ்க்கை என்னும் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வதே. எண்ணம் போல் வாழ்வு.

கோபம் வெற்றியைத் தருமா?

Image
  நாம் கோபத்தினால் பெற்ற வெற்றி உண்மையில் வெற்றி அல்ல ஏனென்றால் நம் எதிராளியின் பொறுமையின் சக்தி நம்மை விட அதிகம் என்பதையே அது உணர்த்துகிறது. கோபம் இரண்டு இதயங்களை பிரிக்கிறது, அன்பு இரண்டு இதயங்களை இணைக்கிறது. நாம் வாழும் காலம் கொஞ்சமே, அதனால் நாம் அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு உண்மையை கண்டறிய தெரியுமா?

Image
  நாம் கேட்கும் ஒவ்வொரு விஷயமும் அடுத்தவரின் அபிப்பிராயமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.அதே போல் ஒவ்வொரு சூழ்நிலையையும் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை அவரது கண்ணோட்டமே தவிர உண்மையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. உண்மையை கண்டறிவது நம்முடைய வேலை. நம் ஆத்மாவில் உள்ள நம் புத்தி சக்திசாலியாக இருக்கும்போது நமக்கு உண்மை புலப்படும். அதற்கு ராஜயோக தியானம் உதவி செய்யும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க எப்பவுமே சந்தோஷமா தானே இருக்கீங்க?

Image
  நாம் எடுத்த காரியம் வெற்றி பெற்றால் தான் சந்தோஷம் என்று நினைப்பதே மிகப் பெரிய தவறு. நாம் சந்தோசமாக இருந்தால் நாம் எடுத்த காரியம் விரைவில் வெற்றி பெறும் என்பதே உண்மையிலும் உண்மை. இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தின் ரகசியம் என்னவென்றால் யாரொருவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறாரோ அவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், அதுயே பகவத் கீதை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று கூறுகிறது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

Image
  நம் குழந்தைகள் தவறான செயல்கள் செய்யும் போது நாம் சரியான செயல் செய்ய வேண்டும் என கற்றுக்கொடுக்கிறோம். நம் குழந்தைகள் தவறான சொற்கள் பயன்படுத்தும் போது நாம் சரியான சொற்கள் பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் நாம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியது நல்ல எண்ணங்களை உருவாக்க, ஏனென்றால் எண்ணம்தான் சொல்லாகிறது, சொல் தான் செயலாகிறது. எண்ணம் போல் வாழ்வு.