Posts

Showing posts from November, 2022

எப்போது ஒரு சமுதாயம் வலுப்பெறும்? | எண்ணம் போல் வாழ்வு

சில நாடுகளில், சில மாநிலங்களில் அரசாங்கமே சாராயம் விற்கிறார்கள். மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். அந்த வருமானத்தை வைத்து அரசாங்கம் மக்களுக்கு இலவச பொருட்களை ரேஷன் கடையில் கொடுக்கிறார்கள். சில மக்கள் அந்த பொருட்களை கடைகளில் விற்று அந்த காசை கொண்டு மீண்டும் குடிக்கிறார்கள். எந்த சமுதாயத்தில் அரசாங்கம் சாராயம் விற்கிறதோ, இலவசங்களை கொடுக்கிறதோ அந்த சமுதாயம் விரைவில் சீர் கெட்டுவிடும். மக்கள் இந்த விஷயத்தை சிந்திக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நாம் செய்யும் எல்லா செயல்களுக்கான பலனும் கிடைத்தே தீரும் | எண்ணம் போல் வாழ்வு

கேரளாவில் பல வருடங்களுக்கு முன்பாக ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையாரின் வயலில் ஒரு விவசாயி தன் மாட்டுடன் வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்தவுடன் தினமும் அந்த மாடு வீட்டுக்கு தானாக போய்விடும். இந்த விவசாயி அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்து வழியில் எங்காவது விழுந்து கிடப்பார். மக்கள் அவரை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். ஒரு நாள் அந்தப் பண்ணையாருக்கும் விவசாயிக்கும் கைகலப்பு ஆனது. அதில் அந்த விவசாயி இறந்து போனார். பண்ணையார் அவரை அந்த வயலிலேயே புதைத்து விட்டார். காவல் துறையினர் விசாரித்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 20 வருடங்கள் கழிந்து ஒரு நாள் மழை பெய்திருக்கும் போது பண்ணையார் இந்த வயலை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி கேட்ட கேட்டபோது அவர் இந்த கொலையை பற்றி கூறினார். அவர் மனைவி பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இதை கூறினார். ஒரு வாரத்தில் காவல்துறையினர் இந்தப் பண்ணையாரை கைது செய்தனர். நாம் செய்யும் கர்மத்திற்கு கண்டிப்பாக பலன் வந்தே தீரும். அதனால் தான் சொல்கிறோம் எண்ணம் சொல் செயல் மூலமாக யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம் என்று. எண்ணம் போல் வாழ்வு.

சவால்கள் வருவதே நம்மை பலசாலி ஆக்கத்தான் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் பிரச்சனைகளோ, சவால்களோ வரும் போது நாம் துவண்டு போகிறோம். அதே பிரச்சினை தீரும் போது அப்பாடா என்று மனம் சாந்தி கொள்கிறோம். ஆனால் நாம் கவனிக்க மறப்பது அந்த பிரச்சனை தீரும் போது நாம் பலசாலி ஆகிறோம் என்பதை தான். எப்படி என்றால் இதே போன்று ஆயிரம் பிரச்சனைகள் பிற்காலத்தில் வந்தாலும் நாம் அதை அசால்டாக வெற்றிக் கொள்வோம். அதனால் பிரச்சனைகளை வருவதை வரவேற்போம். அது நம்மை வீழ்த்த வரவில்லை நம்மை பலசாலி ஆக்க வருகிறது என்பதை புரிந்து கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

ஒரு கோழி பண்ணையில் 100 முட்டைகளை அடைகாத்தால் அதில் 50% சேவலாகவும் 50 சதவீதம் கோழியாகவும் பிறப்பு எடுக்கும். இந்த முட்டை வியாபார உலகில் ஒரு வருடத்தில்  7.8 பில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. ஏனென்றால் அது முட்டை இடுவதில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க இரண்டு விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். அவர்கள் முட்டைகளை ஒரு மிஷினில் வைத்து ஓம் என்பது போல்  ஒலிக்க கூடிய ஒரு இசையை செலுத்தியதால் அனைத்து முட்டைகளும் கோழியாகவே பிறந்தன. நாம் அமைதியாக இருந்து சிந்தித்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எண்ணம் போல் வாழ்வு.

எத்தனை தூரம்.... எத்தனை காலம்.... | எண்ணம் போல் வாழ்வு

மஹாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர் இருந்தாலும், அவர்களுக்கு உதவியாக பல பேர் இருந்தாலும், லட்சக்கணக்கான படை வீரர்கள் இருந்தாலும்.  பாண்டவருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு ஸ்ரீ கிருஷ்ணன் மட்டுமே. அதேபோன்று 800 கோடி ஜனத்தொகை உள்ள உலகத்தில் கோடிக்கணக்கான பேர் நம்மை எதிர்த்தாலும்.  நாம் இறைவனின் கையை இறுக பிடித்துக் கொண்டால் அனைத்து பிரச்சனைகளையும் கடந்து விடலாம். எப்போது தனிமையை உணரும் போது இந்த வரிகளை நினைத்துப் பாருங்கள். எத்தனை தூரம் எத்தனை காலம் என்றே சோர்ந்து விடாதே. உலகம் உன்னுடன் வருமோ என்று உள்ளம் ஏங்கி விடாதே. எண்ணம் போல் வாழ்வு.

அனைத்து உறவுகளுக்கும் மரியாதை கொடுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் நீ எப்போதும் என்னை இளிச்சவாயன், தத்தி என நினைக்கிறாய். அதற்கு மனைவி நீங்கள் தத்தியாக இருப்பதால் தான் உங்களை தத்தியாக நினைக்கிறேன் என்று கூறினார். அதற்கு கணவர் நான் தத்தி என்றால் ஏன் நான் உனக்கு அடுத்த ஏழு பிறவிக்கும்  கணவராக வரவேண்டும் என்று கூறுகிறாய் என்று கேட்டார். அதற்கு மனைவி உங்களைப் போன்ற வேறொரு இளிச்சவாயன் என் வாழ்நாளில் எனக்கு கிடைக்க மாட்டார் என்று கூறினார். உறவுகளில் நாம் அடுத்தவர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டும். அப்போது தான் உறவுகள் சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஒரு பாம்பை கும்பிடுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், அதற்கு பால் கொடுங்கள், வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் கொண்டு வந்த வையுங்கள். ஆனால் ஒரு நாள் அந்தப் பாம்பு உங்களை கொத்ததான் போகிறது. அது போல வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி எல்லோரிடடும் நட்பு பாராட்டுவீர்களானால். சில பேரால் நாம் வஞ்சிக்கப்படுவது நிச்சயம். நாம் யாரிடம் அன்பு பாராட்ட வேண்டும் யாரிடம் விலகி இருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பாருங்கள் | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் வரக்கூடிய நாட்களை எப்படி சமாளிப்பது என்று கவலையில் இருக்கிறீர்களா? அப்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது இன்று வரை வாழ்க்கையில் எப்படி கடந்து வந்திருக்கிறீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் பள்ளியில் படிக்கும் போது உடல் சுகம் இல்லாமல் பரிட்சை எழுதி நல்ல மதிப்போடு தேர்ச்சி பெற்றிருக்கலாம். வேலையில் உங்களுக்கு தெரியாத ஒரு சவால் கொடுக்கப்பட்ட போது அதை கற்றுக்கொண்டு சிறப்பாக செய்து உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டு பெற்றிருக்கலாம். இது போன்று பல சவால்களை சந்தித்து தான் இன்றைய நிலையை வந்து அடைந்திருக்கிறீர்கள். அதனால் வரக்கூடிய நாட்களையும் நாம் நம்பி  எதிர்கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

எது இயற்கையாக கிடைக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு வாலிபன் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தான். இறைவா! நான் குழந்தையாக இருக்கும்போது நான் கேட்காமலேயே எனக்கு பற்களை தந்தாய். நான் கேட்காமலேயே என்னை நடக்க வைத்தாய். நான் கேட்காமலேயே எனக்கு பேச்சு தந்தாய். 15 வயதில் நான் கேட்காமலேயே எனக்கு மீசை தந்தாய். எனக்கு 20 வயதில் ஏன் கேர்ள் ஃப்ரெண்ட் தரவில்லை என்று கேட்டான். நாம் இன்ஜினராகவோ டாக்டராகவோ ஆக வேண்டும் என்றால் நல்லபடியாக படிக்க வேண்டும். ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டுமென்றால் முயற்சி செய்ய வேண்டும். நாம் எதை இயற்கையாக, எதை படித்து, எதை முயற்சி செய்து பெற வேண்டும் என்பதை தெரிந்து இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் திருமணம் காதல் திருமணமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் யார் திருமணம் செய்து கொண்டாலும் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று கூறினார். உடனே நண்பர் உன் திருமணமே காதல் திருமணம் தான் நீயே இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்கு அவர் என் மனைவிக்கும் எனக்கும் தகராறு வரும்போது அவள் எப்போதும் சொல்லும் ஒரு பதில் என்னவென்றால். நாம் காதலிக்கும் போது நீங்கள் தான் என் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தீர்கள் நான் நான் ஒன்றும் சுற்றவில்லை. ஒருவருடைய காதல் திருமணம் கசந்து விட்டால் வேறு ஒருவர் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுவது சரி அல்ல. திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கையை சிறப்பாக வைக்க உதவும். எண்ணம் போல் வாழ்வு. --------- For paid consultation visit https://meet.rigi.club/rajiprem72 ------- RSS Feed for our Audio Series 🌐 Raja Yoga Daily Vani Series - https://anchor.fm/s/75cfde2c/podcast/rss 🌐 எண்ணம் போல் வாழ்வு  Series - https://anchor.fm/s/77cbcca4/podcast/rss 🌐 Raja Yoga 7 Days Course -  https://anchor.fm/s/77d12244/podcast/rss ------ Raja Yoga 7 Days

உங்க Mindset என்ன? | எண்ணம் போல் வாழ்வு | #mindset #மனநிலை

ஒரு மிடில் கிளாஸ் நபருக்கும் ஒரு பணக்காரருக்கும் மனநிலையில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால். ஒரு மிடில் கிளாஸ் நபர் தான் சம்பாதித்து தனக்கு போக பாக்கி உள்ளதை வங்கியில் சேமிப்பார். பணக்காரரிடம் பணம் இருப்பது போல அவரிடம் நிறைய வியாபார யுக்திகளும் தோன்றிக்கொண்டே இருக்கும். அதை செயல்படுத்த அவர் வங்கியில் கடன் வாங்குவார். அதாவது ஒரு மிடில் கிளாஸ் நபர் சம்பாதித்து சேமிப்பார். ஒரு பணக்காரன் தனது சிந்தனைகளை செயல்படுத்த வங்கியில் கடன் வாங்குவார். உங்கள் மைண்ட் செட் என்ன? ஏனென்றால் நம் மகிழ்ச்சிக்கு நம் mindset தான் வழி நடத்துகிறது. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்காதீர்கள் | எண்ணம் போல் வாழ்வு

A என்ற ஊருக்கும் மற்றும் B என்ற ஊருக்கும் என் உள்ள தூரம் ஆயிரம் கிலோமீட்டர்கள். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்தால் B என்ற இடத்திற்கு போய் சேர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆகும் என்று கேட்டால் உடனே ஆயிரம் நூறால் வகுத்தால் பத்து மணி நேரம் என வரும். இந்த விடை சரிதானா என்பது எதைப் பொறுத்து இருக்கிறது என்றால் A விலிருந்து Bயை நோக்கி பிரயாணித்தால் மட்டுமே அது சாத்தியம். Bயை நோக்கி அல்லாமல் வேறு திசையில் நின்றால் அது வேறு ஊருக்கு கொண்டு சென்று விடும். அதனால் ஒரு கேள்வி கேட்ட உடனேயே பதிலை கணக்கிட முற்படாமல் மேலும் தகவல்கள் தேவைப்படுகிறதா என ஆராய வேண்டும். அதற்கு பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

எண்ணங்கள் நம் வாழ்க்கையின் தரத்தை மாற்றுகிறது | எண்ணம் போல் வாழ்வு | #எண்ணம் #தரம்

நாம்  கோவிலில் உள்ள சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், பூ, பழம் கொண்டு செல்லும் போது யாராவது உங்கள் கையில் என்ன என்று கேட்டால் நாம்  தேங்காய், பூ, பழம் என்று சொல்லுவோம். கோவிலில் அர்ச்சனை செய்து வெளியில் வரும்போது யாராவது நம் கையில் என்ன என்று கேட்டால் நாம் பிரசாதம் என்று கூறுவோம் இப்போது நம் கையில் தேங்காய் பூ பழம் தான் இருக்கிறது. இறைவனுக்கு பூஜை செய்த தேங்காய் பூ பழம் பிரசாதம் ஆகிறது. நாம் நம் எண்ண அளவில் நாம் எதற்கும் உபயோகம் அற்றவர் என்று  நினைத்தால் நாம் தத்தி ஆகி விடுவோம். அதே நாம் சிறந்தவர்  என்று நினைக்கும் போது நாம் புத்திசாலி ஆகி விடுகிறோம். நம் எண்ணங்கள் தான் நம்மை தத்தியோ, புத்திசாலியோ ஆக்குகிறது. அதனால் நாம் உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு நல்லது கெட்டது பகுத்தறிய தெரியும் அல்லவா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி இவரிடம் நீ மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உழைக்கிறாயா? என்ன தான் ஆனாலும் மாலையில் அந்த மேனேஜர் உன்னை இரண்டு திட்டு திட்ட தான் போகிறார். அதனால் நீ வேலை செய்யாமல் இருக்கலாம். வேலை செய்து இரண்டு திட்டு வாங்குவதற்கு பதிலாக, வேலை செய்யாமல் நான்கு திட்டு வாங்கி விட்டுப் போகலாம் என்று கூறினார். இன்றைய காலத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் நாம் நமது மேனேஜர் பாராட்டுகிறாரா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல். நாம் வாங்கும் சம்பளத்திற்காக நேர்மையாக வேலை செய்ய வேண்டும். மேனேஜர் பாராட்டினால் சிறப்பு. பொதுவாக நமக்கு யார் நல்வழி சொல்லித் தருகிறார்கள் யார் தீய வழி சொல்லித் தருகிறார்கள் என்பதை பகுத்தறிய தெரிய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

கர்ம விதி என்ன சொல்கிறது என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் என் கன்னத்தில் என்ன காயம் என பார்ப்பவர்கள் கேட்கிறார்கள் என்று கூறினார். அதற்கு மனைவி கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு கணவர் தினமுமா என்று கேட்டார். அதற்கு மனைவி இனிமேல் தினமும் உங்களை அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன் என கூறுகிறார். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனோ மனைவியோ அடிக்கும் பழக்கம் இருக்குமானால் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த பிறவியில் கணவராக இருப்பவர் அடுத்த பிரிவில் மனைவியாகவும். இந்த பிறவியில் மனைவியாக இருப்பவர் அடுத்த பிறவியில் கணவராகவும் பிறப்பார்கள். அப்போது வாங்கியதை வட்டியும் முதலுமாக திரும்ப கொடுப்பார்கள். அல்லது போன பிறவியில் கொடுத்ததை இந்த பிறவியில் வாங்குகிறார்கள் என்று அர்த்தம். அதனால் யாரானாலும் கை ஓங்குவதற்கு முன்னால் இதை சற்று யோசித்தால் நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

இறைவனிடம் என்ன வரம் கேட்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ஐந்து வயதிலிருந்து இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றான் அவனது இருபதாவது வயதில் இறைவன் அவன் முன்பாக தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே அவன் எனக்கு நிறைய செல்வம், நல்ல வீடு, நல்ல கார் மற்றும் சந்தோஷம் வேண்டும் கொடுப்பீர்களா என்று கேட்டேன். இறைவன் கேட்டார் அவ்வளவுதானா நான் தந்தி விடட்டுமா என்று கூறினார் உடனே அவன் எனக்கு காதலிக்க ஒரு பெண்ணும் வேண்டுமென்றான். கடவுள் வரம் தந்து விட்டேன் என்று கூறிவிட்டார் அவன் இறைவனிடம் இந்த கலிகாலத்தில் அனைவரும் ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என இருக்கும் போது நீங்கள் எனக்கு மட்டும் சுகமான வாழ்க்கை தந்ததற்கு நன்றி இறைவா என்று கூறினார் உடனே இறைவன் நீயே உனக்கு ஸ்டர்ஸ் டிப்ரஷன் வருவதற்கு காதலி வேண்டும் என கேட்டிருக்கிறாய் எனக்கூறி மறைந்தார். வாழ்க்கை என்பது சுகம் துக்கத்தின் விளையாட்டு. சுகம் மட்டுமே வாழ்க்கை என்றாலும், துக்க மட்டுமே வாழ்க்கை என்றாலும், வாழ்க்கை கசந்து விடும். சுகம் வரும்போது தலைகால் புரியாமல் நடப்பது தவறு. துக்கம் வரும்போது துவண்டு போவதும் தவறு. இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க ரொம்ப ஸ்மார்ட் தானே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவனுடைய நண்பரிடம் சொன்னான் நீ காதலிப்பதாக இருந்தால் ஒரு சிங்கிளாக இருக்கும் பெண்ணை காதலிக்காதே ஒரு boy friend இருக்கும் பெண்ணை காதலி என்று கூறினான். உடனே இவன் என்ன சொல்ல வருகிறாய் எனக் கேட்டான். நாம் எப்போது சிங்கிளாக இருக்கும் பெண்ணை காதலித்தால் அவள் பின்னால் ஒரு 20 பேர் இருப்பார்கள். அவர்களை மீறி அந்த பெண்ணின் மனதில் இடம் பெறுவது கடினமாக இருக்கும். அதே ஒரு பாய் பிரண்டு இருக்கும் பெண்ணை மனதை ஈர்ப்பது சற்று எளிது தான் என்று கூறினான்.  இந்த காலத்து இளைஞர்கள் மிக ஸ்மார்ட்டாக இருக்கிறார்கள். இந்த சாமர்த்தியத்தை படிப்பிலும், தொழிலிலும், வாழ்க்கை இலட்சியத்திலும் காண்பித்தால் மிக சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

சுகமோ துக்கமோ இரண்டும் கடந்து போகும் | எண்ணம் போல் வாழ்வு

நேற்று நடந்த ஒரு சம்பவத்தை நாம் நேற்றுக்கு போய் சரி செய்ய முடியாது. அதேபோல இன்று அல்லது நாளை நடக்கவிருக்கும் சம்பவங்கள் நாம் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோமோ அதன் அடிப்படையில் அதன் முடிவு இருக்கும். நாளை என்பது ஒரு நாள் இன்று ஆகும். இன்று என்பது நாளை நேற்று ஆகும். அதில் நல்லதும் கெட்டதும் நடக்கும். ஆனால் இரண்டுமே கடந்து போகும். அதனால் நாம் எப்போதும் ஒரு நேர்மறையான மனநிலையில் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

கணவன் மனைவி உறவு மேம்பட | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவன் மனைவிக்கு எப்போது பார்த்தாலும் சண்டை. அதனால் அவர்கள் ஒரு கவுன்சிலரிடம் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக அந்த கவுன்சிலர் சந்தித்தார் .அப்போது அந்த பெண்மணி கவுன்சிலரிடம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உணவு சமைத்து போடுவது எனக்கு வேலையா என கேட்டார். அதற்கு அந்த கவுன்சிலர் ஜெனிவா கன்வென்ஷன் சொல்கிறது சிறை கைதிகளுக்கு உணவு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று. அதேபோல உங்கள் கணவரை உங்களுடைய ஆயுள் கைதி என நீங்கள் நினைத்தால் அவருக்கு உணவு பரிமாறுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தோன்றும். ஆனால் அவர் உங்கள் வாழ்க்கையில் பாதி எனப் புரிந்தால். அவர் சம்பாதிக்கிறார் நாம் சமையலை பார்த்துக் கொள்கிறோம். அவர் ஒரு வேலை செய்கிறார் நான் ஒரு வேலை செய்கிறேன் என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு இகழ்ச்சி புகழ்ச்சி சமமாக பார்க்கத் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண்மணி தன் கணவரிடம் அடுத்து ஏழு பிறவிக்கும் நீங்கள் தான் என் கணவராக வரவேண்டும் என்று கூறினார்‌. அதற்கு கணவர் உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா என கேட்டார். அதற்கு மனைவி ஆமாங்க நீங்கன்னா எனக்கு உயிர் என்று கூறினார். அன்று மாலை இந்த பெண்மணி தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்தபோது கூறினார் அடுத்து ஏழு பிறவிக்கும் என் கணவரே எனக்கு கணவராக வரவேண்டும் என்று. அதற்கு அவர்கள் தோழி உனக்கு உன் கணவர் என்றால் மிகவும் பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு அவர் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி அவர மாதிரி ஒரு இளிச்சவாயன் வேற ஒருத்தர் எனக்கு கிடைக்க மாட்டார் என்று கூறினார். நம் வாழ்வில் நிகழ்ச்சியோ புகழ்ச்சியோ மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணம் போல் வாழ்வு.