Posts

Showing posts from December, 2022

உங்கள் வியாபாரம் லாபம் தருகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

வல்லுனர்கள் வியாபாரத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா நீங்கள் வியாபாரம் தொடங்கி 36 மாதம் ஆகியும் உங்களுக்கு லாபம் வரவில்லை என்றால் நீங்கள் வியாபாரமே செய்யவில்லை நீங்கள் ஏதோ hobby போல வியாபாரம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். மூன்று வருடம் ஆகியும் லாபம் வரவில்லை என்றால் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். இதை விரைவில் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களிடம் இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வாங்குவதற்கான பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டில் முதலீடு செய்வீர்களா? அல்லது நகையில் முதலீடு செய்வீர்களா? இரண்டுமே 10, 20 வருடங்களுக்கு பிறகு நிறைய பணத்தை நமக்கு சம்பாதித்து தரும். ஆனால் நம் நகையோ நமது பீரோவில் அல்லது பேங்கில் இருக்கும். ஆனால் நாம் வாங்கும் வீடோ நமக்கு வாடகை தரும் அல்லது நாமே அங்கு தங்கிக் கொள்ளலாம். நாம் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி பல விஷயங்களை பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நாம் பேசும்போது யுக்தியுடன் பேச வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றார். அவருடைய மனைவி நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் நான் உன் தந்தையிடம் தான் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினார். அதற்கு மனைவி நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று கூறியது போல் இருந்தது என்று கேட்டார். உன் தந்தை நான் டூர் போகிறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்டார் அதற்கு நான் வேண்டாம் என்று கூறினேன். மனைவி நீங்கள் என் தந்தைக்கு கிடைத்த வரப்பிரசாதம். என் தந்தை எந்த ஊருக்கு போகிறார் என்று கேட்டார். அதற்கு அவர் திருநெல்வேலிக்கு  என்று கூறினார். உடனே மனைவி திருநெல்வேலியென்றால் அப்பாவை அல்வா கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். அதற்கு கணவர் உன் தந்தை தான் எனக்கு கல்யாணத்திலே  எனக்கு 50 கிலோ அல்வா கொடுத்து விட்டாரே என்று. நாம் பேசும்போது ஜாக்கிரதையாக யுக்தியுடன் பேச வேண்டும். பிரச்சனை வருவது போன்று பேச்சு வார்த்தையை நாமே தொடங்கி வைக்க கூடாது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நமக்கு பத்து, பதினைந்து நிமிடத்தில் மரணம் வரும் என தெரிந்திருந்தும் அப்போதும் மண், பொன், பெண் என மோகம் இருந்தால் நாம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தம். யார் ஒருவர் ஆசையை வென்று உயிரோடு இருக்கிறாரோ அவர் முக்தி நிலை அடைந்தது போன்று ஆகும். அவர் ஒரு மகான் வாழ்க்கை வாழ்கிறார். நாம் ஆசையை வெல்லவில்லை என்றால் நாம் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வந்து கொண்டே இருப்போம். அதனால் நாம் எல்லோரும் ஆசையை வெல்ல முயற்சி செய்யவும். எண்ணம் போல் வாழ்வு.

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது ஒரு சொல்லாடல் ஆகும். அதாவது நாம் முயற்சி செய்தால் முழுமை அடையலாம் என்று பொருள். ஆனால் இந்த கூற்று தவறாகும். நாம் முயற்சி செய்தால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய முடியும். நாளை மீண்டும் முயற்சி செய்தால் அதை விட சிறப்பாக செய்ய முடியும். ஆனால் என்றும் முழுமை அடைய முடியாது . எப்போது முழுமை தன்மைக்காக முயற்சி செய்கிறோமோ நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நமக்கு ஊக்கம் உற்சாகம் வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் ஏழையாக இருப்பதற்கும், மிடில் கிளாஸ் ஆக இருப்பதற்கும், பணக்காரராக இருப்பதற்கும் அவரவர் மனநிலையை காரணம். ஒரு ஏழை தனது மாத செலவுகளை ஈடுகட்ட தான் வேலைக்கு செல்கிறார். ஒரு மிடில் கிளாஸ் நபர் கௌரவமான வாழ்க்கைக்காக உழைக்கிறார். ஒரு பணக்காரர் தனக்கு கிடைக்கும் பணம் மேலும் பணத்தை சம்பாதிக்க வழிமுறைகளை தேடுகிறார், செய்கிறார். எல்லாவற்றிற்கும் நம் மனதிலேயே காரணம் என்பதை நாம் உணர முடிகிறது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

அடுத்தவருக்கு இருக்கும் திறமை நமக்கு இல்லாத போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. அதேபோன்று நம் திறமையை அடுத்தவர்கள் அங்கீகரிக்காத போதும் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த இரண்டுமே தவறாகும். நாம் திறமை இல்லை என்று புலம்பும் நேரத்தில் அதை விடுத்து திறமை வளர்க்க முயற்சி செய்வோமானால் நன்றாக இருக்கும். அதே போன்று நாம் எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களின் சர்டிபிகேட் காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களை சரி செய்து விட்டால் நம் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனக்கண் திறந்திருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் இருசக்கர வாகனத்தில் காலியாக இருக்கும் ஒரு ரோட்டில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ மீட்டர் போன பிறகு நம் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடிக்கிறோம். உடனே நம் மனது ஒருவேளை நமக்கு அந்த பணம் கிடைக்காது என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் தேடிப் பார்ப்போம் என்று தேடி நாமும் அந்த பணம் கிடைக்காது. அதே நாம் இந்த ரோடு காலியாக தான் இருக்கிறது நாம் ஒரு விழிப்போடு தேடினால் நமக்கு அந்த ரூபாய் கிடைக்கும். நாம் சந்தோஷமாக இருக்கும் போது நம் மனக்கண் திறந்து இருக்கும். நம் கண்களும் திறந்திருக்கும். பொருட்களும் கண்களில் படும். நாம் எப்போது துக்கத்தில் இருக்கிறோமோ நம் மனக்கண் மூடிவிடும். நம் கண்கள் திறந்து இருந்தாலும் நான் பார்க்க வேண்டியதை பார்க்க மாட்டோம். நம் மனம் தான் எண்ணங்களை உருவாக்கக்கூடிய ஒரு தொழிற்சாலை அதனால் தான் சொல்கிறோம். எண்ணம் போல் வாழ்வு.

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு

யார் வேலைக்கு போக வேண்டும், யார் வியாபாரம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகிறார். யார் ஒருவர் வியாபாரத்தில் தினந்தோறும் தனக்கு ஊக்கம் உற்சாகம் தர ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறாரோ. அவர் வியாபாரம் செய்யவே வந்திருக்கக் கூடாது என்று. அதுவரை ஒருவர் வேலைக்கு போய் தன் முதலாளியிடம் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு எப்போது தனக்கு இந்த எல்லையற்ற ஊக்கம் உற்சாகம் வருகிறதோ அன்று வியாபாரம் தொடங்கினால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையில் யார் பணக்காரர் ஆக முடியாது? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில் யார் பணக்காரர் ஆக முடியாது தெரியுமா? 1. யார் வீட்டுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் கடன் மூலம் வாங்குகிறார்களோ.... 2. யார் தன் வருமானத்துக்கு மீறி செலவு செய்கிறார்களோ.... 3. யார் நாளைக்கு என்று சேமிக்காமல் இன்றே எல்லாம் செலவு செய்து விடுகிறார்களோ.... இவர்கள் வாழ்க்கையில் பணக்காரர் ஆக முடியாது. நாம் மேல கூரிய ஏதாவது ஒரு ஒரு செயலை செய்கிறோம் என்றால் அதை உடனடியாக மாற்றிக் கொள்வோம். நாமும் பணக்கார் ஆவோம்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு இளைஞன் ஒரு பெண்ணை ஒரு தலையாக விரும்புகிறார். அவரது நண்பர்கள் அவனிடம் நீ எப்போது உன் விருப்பத்தை அந்த பெண்ணிடம் கூறுவாய் என்று கேட்டார்கள். அதற்கு அவன் எனக்கு வேலையில் ஒரு பிரமோஷன் கிடைக்கும் போது நான் அவளிடம் போய் சொல்வேன் என்று சொன்னான். அதற்கு நண்பர்கள் அதுவரை அவள் காத்திருப்பாளா என்று கேட்டனர். அதற்கு அவன் வாழ்க்கையில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால்.  ஒரு கல்யாணமாகாத பையன் தன்னுடைய வருங்கால மனைவியின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறான். ஒரு கல்யாணம் ஆகாத பெண் தன் வருங்கால கணவரின் மாமியாரின் வீட்டில் வாழ்கிறாள். காலம் வரும்போது இருவரும் சந்திக்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் செய்யும் செயலை திடகார்த்தமான நம்பிக்கையுடன் சிறப்பாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.  எண்ணம் போல் வாழ்வு.

யார் கிட்ட என்ன பேசனும் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் யாரிடம் நீண்ட நேரம் பேச வேண்டும். யாரிடம் சுருக்கமாக பேச வேண்டும். யாரிடம் பேசவே கூடாது என்பது தெரிந்து இருக்காததால். நாம் சில நேரங்களில் விரிவாக பேச வேண்டிய இடத்தில் ரத்தின சுருக்கமாக பேசி விடுவோம். எங்கே ரத்தின சுருக்கமாக பேச வேண்டுமோ அங்கே விரிவாக பேசி விடுவோம். இதுவே எல்லா பிரச்சனைக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. நாம் எப்போது யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து இருந்தால் நம் வாழ்க்கையை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நம் வாழ்க்கையை போட்டியாக பார்க்க வேண்டாம் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையை போட்டியாக பார்த்தால் நமக்கு பயம் மற்றும் insecure ஆக feel செய்வோம்.  மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் நமக்கு சந்தோஷம் இருக்காது. நம் வாழ்க்கையை  ஒரு பயணம் என நினைத்து நம் வேகத்தில் நம் திறமையை பயன்படுத்தி நல்ல ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து வந்தால். நமக்கு சந்தோசம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் வாழ்க்கையை போட்டியாக நினைக்கும் போது அதை வெற்றி கொள்ள தவறான வழிகளையும் பின்பற்ற எண்ணங்கள் தோன்றும். அதனால் நம் வாழ்க்கையை ரசித்து வாழ்வோம் அப்போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

சூரியன் ஆணா? பெண்ணா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம் சூரியன் ஆணா பெண்ணா என்று கேட்டார். அதற்கு சுவாரசியமான பதிலை தருமாறு கேட்டுக் கொண்டார். நல்ல படிக்கும் மாணவர்கள் சூரியன் ஆண் என்றும் அதற்கான தங்கள் விளக்கத்தை கூறினர். பள்ளியில் எப்போதும் பரிட்சையில் தோற்கும் மாணவரிடம் உன் பதில் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் சூரியன் ஒரு பெண், ஏனென்றால் அழகான பெண்ணின் பிறகு ஆண்கள் சுற்றுவார்கள். அதே போன்று சூரியனின் பின்னே கிரகங்கள் சூற்றி கொண்டிருக்கின்றன, அதனால் சூரியன் பெண் என்றான்.  ஒருத்தர் படிப்பில் கெட்டிக்காரராக இல்லாம இருக்கலாம் ஆனால் smart ஆக இருக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் தூக்கத்தில் குறட்டை விடுவீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

சிலருக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கும் ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்குவார்கள். அதே அறையில் தூங்கும் மற்றவர்களுக்கு தான் இவரின் குறட்டையின் மூலம் கஷ்டம். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் குறட்டை விடுபவரின் காதுகளுக்கு அந்தக் குறட்டை சத்தம் கேட்பதில்லை. ஆனால் அதே சத்தம் அதே அரையில் இருக்கும் மற்றவர் காதுகளில் விழுகிறது. இது என்ன அதிசயம் என நாம் வியந்து பார்க்கிறோம்‌ மனித உடலின் படைப்பு எப்படி படைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். என்னவாக இருந்தாலும் நாம் இது எல்லாம் தாண்டி வாழ்ந்து தான் ஆக வேண்டும் ஏனென்றால். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy

நாம் பொதுவாக யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்றால் அது அவருடைய கர்மா. கர்மா அவரை வைத்து செய்கிறது என்று எல்லாம் சொல்வோம். ஆனால் நாம் ஏதாவது ஒரு பிரச்சனையில் விழுந்து விட்டோம் என்றால் உடனே இறைவன் நம்மை சோதிக்கிறார் என்று கூறுவோம். அதாவது அடுத்தவர்களுக்கு வந்தால் ரத்தம் நமக்கு வந்தால் தக்காளி சட்னி. நாம் புரிந்து இருக்க வேண்டியது. நாம் நல்ல காரியங்கள் செய்தால் நமக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும், நாம் கெட்ட காரியங்கள் செய்தால் நமக்கு கெட்ட நிகழ்வுகள் நடக்கும். இது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் விலை உயர்ந்த saree தான் வாங்குவீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

காதலிக்கும் போது ஒரு ஆணுக்கு பெண்ணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது அதைப்போல ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் நல்ல மற்றும் கெட்ட குணங்களின் ஒரு பேக்கேஜ் தான். திருமணம் ஆகும் போது தான் இருவருக்கும் அடுத்தவரில் நல்ல, கெட்ட குணங்கள் தெரிய வருகிறது. நம் மனதுக்கு ஒருவர் நல்லவராக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இது நடைமுறைய்ல் நடக்காத விஷயமாகும். அதனால் திருமண வாழ்வில் இருவரும் அடுத்தவரின் குணத்தை அப்படியே ஏற்று வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

காதலிக்கும் போது ஒரு ஆணுக்கு பெண்ணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது அதைப்போல ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் நல்ல மற்றும் கெட்ட குணங்களின் ஒரு பேக்கேஜ் தான். திருமணம் ஆகும் போது தான் இருவருக்கும் அடுத்தவரில் நல்ல, கெட்ட குணங்கள் தெரிய வருகிறது. நம் மனதுக்கு ஒருவர் நல்லவராக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இது நடைமுறைய்ல் நடக்காத விஷயமாகும். அதனால் திருமண வாழ்வில் இருவரும் அடுத்தவரின் குணத்தை அப்படியே ஏற்று வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

வெற்றி ஏன் தள்ளி போகிறது என உங்களுக்கு தெரியுமா?

வெற்றி தள்ளிப் போவதற்கான மூன்று காரணங்கள். 1. Comfort zone நாம் இயற்கையாகவே கடினமாக உழைப்பதை விரும்பாததால். 2. Learned helplessness ஒரு வேளை இளமையில் நமக்கு கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுத்த கணக்கு புரியவில்லை என்றால். நாம் ஒரு முடிவுக்கு வந்து விடுவோம் நமக்கு கணக்கு புரியாது என்று. ஆனால் ஒரு சிறந்த ஆசிரியரிடம் போனாலோ? நாமே youtube இல் பார்த்து கற்றுக் கொண்டாலோ. நமக்கு  கணக்கு சிறப்பாக வரும் என்பதை பிற்காலத்தில் புரிந்து கொள்வோம். 3. நாம் எப்போதும் எளிமையான வழிகளையே பின்பற்ற விரும்புகிறோம் கடினமான பாதியை தவிர்க்க விரும்புகிறோம். இந்த மூன்று காரணங்களை ஆய்வு செய்து திருத்திக் கொண்டால் நாம் வெற்றி கண்டிப்பாக அடைவோம். எண்ணம் போல் வாழ்வு.

பணம் என்னடா பணம் பணம் | எண்ணம் போல் வாழ்வு

நாம் எல்லோரும் பொதுவாக என்ன நினைக்கிறோம் என்றால் கை நிறைய காசு இருந்தால் இந்த காலத்தில் வாழ்ந்து விடலாம் என்று. இன்போசிஸ் சேர்மன் திரு நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி அவர்கள் ஒரு காணொளியில் இப்படி கூறியிருக்கிறார்கள். அதாவது பணம் பத்து சதவீத பிரச்சனைகளை தான் தீர்க்கும் என்று. அவரிடம் இருந்த காசை வைத்துக் கொண்டு அவரது தாயையோ, மாமியாரையோ காப்பாற்ற முடியவில்லை. ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால் பணம் மிக மிக முக்கியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்பது சரியல்ல. எண்ணம் போல் வாழ்வு.

பூஜ்யம் வந்த கதை உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

பல நூறு வருடங்களுக்கு முன்பாக பாரதத்தில் ஒரு சர்வே செய்தார்கள். அதாவது மனைவிக்கு பயப்படாத கணவன்மார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என தேடினார்கள். பல குடும்பங்களில் சர்வே நடந்தது. கடைசியாக அவர்கள் கண்டுபிடித்தது ஒரு ஆண் மகனும் இல்லை என்று. இதை எப்படி குறிப்பது என்று ஆலோசித்து இருக்கும் போது தான் அவர்கள் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார்கள். இது தான் பூஜ்யம் வந்ததற்கான சுவாரசியமான கற்பனையான கதை. கதை என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒரு குடும்பத்தில் மனைவிக்கு பயப்படும் கணவனோ அல்லது கணவனுக்கு பயப்படும் மனைவியோ சிறந்த குடும்பம் அல்ல. எந்த குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு பாராட்டி வாழ்கிறார்களோ அது தான் சிறந்த குடும்பமாகும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு பெண் பார்க்கப் போகும் போது டீ கிடைத்ததா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி தன் கணவருக்கு டீ கொடுத்தார். அப்போது அவர் எதையோ நினைத்து சிரித்தார். அதை பார்த்த கணவர் எதற்கு சிரிக்கிறாய் என கேட்டார்.  உங்களுக்கு டீ கொடுக்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் என்னை பெண் பார்க்க வந்த சம்பவம் ஞாபகம் வருகிறது. அன்று நான் உங்களுக்கு கொடுத்த டீயை மட்டுமே நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள். உங்கள் சொந்தக்காரர்கள் பெண்ணையும் பார் என சொன்னதற்கு பிறகுதான் நீங்கள் என்னை பார்த்தீர்கள். இதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வரும். அதற்கு கணவர் அன்று நான் டீ கோப்பையை பார்த்ததால் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். உன்னை பார்த்து இருந்தால் இந்த திருமணத்தை நிராகரித்திருப்பேன் என்று கூறினார். ஒரு திருமணம் நடப்பதற்கு முன்பாக என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும். திருமணத்திற்கு பிறகு நம் சிந்தனை, சொல், செயல் எல்லாம் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

பொறுமையின் உண்மையான அர்த்தம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் பொறுமையாக இருக்கிறார் என்பதன் பொருள் அவர் சும்மா இருக்கிறார் என்பது அல்ல. வெற்றி கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ அதற்காக உழைப்பு போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று பொருள். பாண்டவர்கள் பல வருடங்கள் காட்டில் இருந்தார்கள். ஒரு வருடம் மறைந்து வாழ்ந்தார்கள். தூது போனார்கள். பிறகு போர் செய்து வெற்றி பெற்றார்கள். அதனால் தான் கூறுகிறோம் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று. அதனால் பொறுமை என்பதன் பொருள் சும்மா இருப்பதல்ல. விடை கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் உழைத்தலாகும். எண்ணம் போல் வாழ்வு.