உங்களுக்கு நல்லது கெட்டது பகுத்தறிய தெரியும் அல்லவா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி இவரிடம் நீ மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உழைக்கிறாயா? என்ன தான் ஆனாலும் மாலையில் அந்த மேனேஜர் உன்னை இரண்டு திட்டு திட்ட தான் போகிறார். அதனால் நீ வேலை செய்யாமல் இருக்கலாம். வேலை செய்து இரண்டு திட்டு வாங்குவதற்கு பதிலாக, வேலை செய்யாமல் நான்கு திட்டு வாங்கி விட்டுப் போகலாம் என்று கூறினார்.
இன்றைய காலத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் நாம் நமது மேனேஜர் பாராட்டுகிறாரா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல். நாம் வாங்கும் சம்பளத்திற்காக நேர்மையாக வேலை செய்ய வேண்டும். மேனேஜர் பாராட்டினால் சிறப்பு.
பொதுவாக நமக்கு யார் நல்வழி சொல்லித் தருகிறார்கள் யார் தீய வழி சொல்லித் தருகிறார்கள் என்பதை பகுத்தறிய தெரிய வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment