எண்ணங்கள் நம் வாழ்க்கையின் தரத்தை மாற்றுகிறது | எண்ணம் போல் வாழ்வு | #எண்ணம் #தரம்
நாம் கோவிலில் உள்ள சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், பூ, பழம் கொண்டு செல்லும் போது யாராவது உங்கள் கையில் என்ன என்று கேட்டால் நாம் தேங்காய், பூ, பழம் என்று சொல்லுவோம்.
கோவிலில் அர்ச்சனை செய்து வெளியில் வரும்போது யாராவது நம் கையில் என்ன என்று கேட்டால் நாம் பிரசாதம் என்று கூறுவோம் இப்போது நம் கையில் தேங்காய் பூ பழம் தான் இருக்கிறது.
இறைவனுக்கு பூஜை செய்த தேங்காய் பூ பழம் பிரசாதம் ஆகிறது.
நாம் நம் எண்ண அளவில் நாம் எதற்கும் உபயோகம் அற்றவர் என்று நினைத்தால் நாம் தத்தி ஆகி விடுவோம். அதே நாம் சிறந்தவர் என்று நினைக்கும் போது நாம் புத்திசாலி ஆகி விடுகிறோம். நம் எண்ணங்கள் தான் நம்மை தத்தியோ, புத்திசாலியோ ஆக்குகிறது. அதனால் நாம் உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment