நாம் செய்யும் எல்லா செயல்களுக்கான பலனும் கிடைத்தே தீரும் | எண்ணம் போல் வாழ்வு

கேரளாவில் பல வருடங்களுக்கு முன்பாக ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையாரின் வயலில் ஒரு விவசாயி தன் மாட்டுடன் வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்தவுடன் தினமும் அந்த மாடு வீட்டுக்கு தானாக போய்விடும். இந்த விவசாயி அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்து வழியில் எங்காவது விழுந்து கிடப்பார். மக்கள் அவரை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

ஒரு நாள் அந்தப் பண்ணையாருக்கும் விவசாயிக்கும் கைகலப்பு ஆனது. அதில் அந்த விவசாயி இறந்து போனார். பண்ணையார் அவரை அந்த வயலிலேயே புதைத்து விட்டார். காவல் துறையினர் விசாரித்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 20 வருடங்கள் கழிந்து ஒரு நாள் மழை பெய்திருக்கும் போது பண்ணையார் இந்த வயலை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி கேட்ட கேட்டபோது அவர் இந்த கொலையை பற்றி கூறினார். அவர் மனைவி பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இதை கூறினார். ஒரு வாரத்தில் காவல்துறையினர் இந்தப் பண்ணையாரை கைது செய்தனர்.

நாம் செய்யும் கர்மத்திற்கு கண்டிப்பாக பலன் வந்தே தீரும். அதனால் தான் சொல்கிறோம் எண்ணம் சொல் செயல் மூலமாக யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம் என்று.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு