கணவன் மனைவி உறவு மேம்பட | எண்ணம் போல் வாழ்வு
ஒரு கணவன் மனைவிக்கு எப்போது பார்த்தாலும் சண்டை. அதனால் அவர்கள் ஒரு கவுன்சிலரிடம் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக அந்த கவுன்சிலர் சந்தித்தார் .அப்போது அந்த பெண்மணி கவுன்சிலரிடம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உணவு சமைத்து போடுவது எனக்கு வேலையா என கேட்டார்.
அதற்கு அந்த கவுன்சிலர் ஜெனிவா கன்வென்ஷன் சொல்கிறது சிறை கைதிகளுக்கு உணவு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று. அதேபோல உங்கள் கணவரை உங்களுடைய ஆயுள் கைதி என நீங்கள் நினைத்தால் அவருக்கு உணவு பரிமாறுவது உங்களுக்கு பெரிய பிரச்சினையாக தோன்றும். ஆனால் அவர் உங்கள் வாழ்க்கையில் பாதி எனப் புரிந்தால். அவர் சம்பாதிக்கிறார் நாம் சமையலை பார்த்துக் கொள்கிறோம். அவர் ஒரு வேலை செய்கிறார் நான் ஒரு வேலை செய்கிறேன் என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment