உங்கள் மனக்கண் திறந்திருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
நாம் இருசக்கர வாகனத்தில் காலியாக இருக்கும் ஒரு ரோட்டில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிலோ மீட்டர் போன பிறகு நம் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடிக்கிறோம். உடனே நம் மனது ஒருவேளை நமக்கு அந்த பணம் கிடைக்காது என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும் தேடிப் பார்ப்போம் என்று தேடி நாமும் அந்த பணம் கிடைக்காது.
அதே நாம் இந்த ரோடு காலியாக தான் இருக்கிறது நாம் ஒரு விழிப்போடு தேடினால் நமக்கு அந்த ரூபாய் கிடைக்கும்.
நாம் சந்தோஷமாக இருக்கும் போது நம் மனக்கண் திறந்து இருக்கும். நம் கண்களும் திறந்திருக்கும். பொருட்களும் கண்களில் படும்.
நாம் எப்போது துக்கத்தில் இருக்கிறோமோ நம் மனக்கண் மூடிவிடும். நம் கண்கள் திறந்து இருந்தாலும் நான் பார்க்க வேண்டியதை பார்க்க மாட்டோம்.
நம் மனம் தான் எண்ணங்களை உருவாக்கக்கூடிய ஒரு தொழிற்சாலை அதனால் தான் சொல்கிறோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment