உங்களுக்கு பெண் பார்க்கப் போகும் போது டீ கிடைத்ததா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி தன் கணவருக்கு டீ கொடுத்தார். அப்போது அவர் எதையோ நினைத்து சிரித்தார். அதை பார்த்த கணவர் எதற்கு சிரிக்கிறாய் என கேட்டார்.  உங்களுக்கு டீ கொடுக்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் என்னை பெண் பார்க்க வந்த சம்பவம் ஞாபகம் வருகிறது. அன்று நான் உங்களுக்கு கொடுத்த டீயை மட்டுமே நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தீர்கள். உங்கள் சொந்தக்காரர்கள் பெண்ணையும் பார் என சொன்னதற்கு பிறகுதான் நீங்கள் என்னை பார்த்தீர்கள். இதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வரும். அதற்கு கணவர் அன்று நான் டீ கோப்பையை பார்த்ததால் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். உன்னை பார்த்து இருந்தால் இந்த திருமணத்தை நிராகரித்திருப்பேன் என்று கூறினார்.

ஒரு திருமணம் நடப்பதற்கு முன்பாக என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும். திருமணத்திற்கு பிறகு நம் சிந்தனை, சொல், செயல் எல்லாம் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு