நாம் பேசும்போது யுக்தியுடன் பேச வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றார். அவருடைய மனைவி நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் நான் உன் தந்தையிடம் தான் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினார். அதற்கு மனைவி நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று கூறியது போல் இருந்தது என்று கேட்டார். உன் தந்தை நான் டூர் போகிறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்டார் அதற்கு நான் வேண்டாம் என்று கூறினேன்.

மனைவி நீங்கள் என் தந்தைக்கு கிடைத்த வரப்பிரசாதம். என் தந்தை எந்த ஊருக்கு போகிறார் என்று கேட்டார். அதற்கு அவர் திருநெல்வேலிக்கு  என்று கூறினார். உடனே மனைவி திருநெல்வேலியென்றால் அப்பாவை அல்வா கொண்டு வரச் சொல்லி இருக்கலாம்.

அதற்கு கணவர் உன் தந்தை தான் எனக்கு கல்யாணத்திலே  எனக்கு 50 கிலோ அல்வா கொடுத்து விட்டாரே என்று.

நாம் பேசும்போது ஜாக்கிரதையாக யுக்தியுடன் பேச வேண்டும். பிரச்சனை வருவது போன்று பேச்சு வார்த்தையை நாமே தொடங்கி வைக்க கூடாது.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் யார் வீட்டில் இருக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு