Posts

வாழ்க்கை ஒரு கரும்பு மாதிரி | எண்ணம் போல் வாழ்வு

 ஒரு நபர் அவர் நண்பர் கிட்ட வாழ்க்கை என்பது ஒரு கரும்பு மாதிரி அப்படின்னு சொல்றார் அதற்கு அந்த நண்பர் அது இனிக்கிர நாலயா என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் வாழ்க்கை நம்மல கரும்பு சக்கை போல பிழிந்து எடுப்பதனால  என்றார். உண்மை தாங்க வாழ்க்கை ஒரு கரும்பு போல தான். நேர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை இனிக்கும். எதிர்மறையாக சிந்திப்பவர்க்கு வாழ்க்கை கரம்ப சக்கைப்போல் பிழிந்து எடுத்துவிடும். நாம் நம் வாழ்க்கையை நேர்மறையாக பார்ப்போம் இனிப்பாக வைத்துக்கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

கச்சா பதாம் | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை போரடிக்குதா? வாழ்க்கையிலே thrill இல்லையா? அப்படி இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்க கத்துக்கங்க. வாழ்க்கை போரடிக்குது எப்படி ரசிப்பது என்று கேட்கிறீர்களா? கச்சா பதாம் ன்னு அப்படின்னு ஒரு பாட்டு வந்திருக்கு அதை புரிஞ்சா ரசிக்கிறோம். அதுபோல வாழ்க்கையை ரசிக்க கத்துக்கோங்க. சிலர பார்த்த உடனே பிடிக்கும். சிலர பழகப்பழக பிடிக்கும் வாழ்க்கையை வாழ வாழ பிடிக்கும், ரசிக்க ரசிக்க பிடிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Plastic surgeryக்கு‌ எவ்வளவு ஆகும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் டாக்டர் கிட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு ஆகும் என்று கேட்டார். அதற்கு டாக்டர் இரண்டரை லட்சம் ருபாய் ஆகும் என்று கூறினார். உடனே அந்த நபர் நாங்க பிளாஸ்டிக் தந்தா? உலகத்தில் இந்த மாதிரி அபத்தமாக பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகத்தில் எல்லோருக்கும் சில விஷயங்கள் தான் தெரியும் பல விஷயங்கள் தெரியாது. இதுதான் பொதுவான உண்மை. அதனால் நாம் அடுத்தவரின் அறியாமையை விமர்சனம் செய்ய வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

யார் வாழ்க்கை திருப்தியாக இருக்கும்? | எண்ணம் போல் வாழ்வு

யார் வாழ்க்கை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும் என்றால் யார் நேற்றைய பற்றி கவலை இல்லையோ நாளை பற்றிய பயம் இல்லையோ அவர்களுக்கு தான். அவர்கள் நம் வாழ்க்கையே ஒரு நாடகம் என்பதை அறிந்திருப்பார்கள். பகவத் கீதை சொல்வது போன்று நேற்றும் நல்லது, இன்றும் நல்லது, நாளையும் நல்லது என்பதை நூற்றுக்கு நூறு சதவீதம் உணர்ந்திருப்பார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சமயோசிதமாக சிந்திப்பவரா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ம வாழ்க்கையில காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன், மழை அடிகும் நேரம் உப்பு விக்க போனேன் இப்படி பொலம்பிட்டு இருக்கக்கூடாது புத்திசாலித்தனமா மாவையும் உப்பையும் சேர்த்து போண்டா பண்ணி வித்து காசு பார்க்கணும். யாரு சமயோசிதமாக சிந்திக்கிறார்களோ அவங்களுக்கு எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

எந்த அப்பா correct? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அப்பாவும் பையனும் ட்ரெயின்ல யாத்திரை செய்றாங்க, அப்போது ஜன்னல் வழியாக பார்க்கும் காட்சி ஒரு பையன் மாடு மேய்க்கிறான் அப்போது அப்பா சுமாராக படிக்கும் பையனிடம் நீ இந்த லட்சணத்தில் படிச்சா நீயும் மாடு மேய்க்க வேண்டியதான்னு சொல்றாரு. அடுத்த கம்பார்ட்மெண்டில் ஒரு அப்பா சுமாரா படிக்கிற பையன்கிட்ட நீ படிச்சு பெரிய ஆளாகி பெரிய பெரிய கண்டுபிடிப்பு செய்து இந்த மாடு மேய்க்கிறவங்களுக்கு உதவி செய்ற மாதிரி கருவிகள் கண்டுபிடிக்கணும்ன்னு சொல்றார். இதுல எந்த அப்பா correct  முதலாவதா இரண்டாவதா. இரண்டாவது தான் கரெக்ட் ஏன்னா எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் யார் குழந்தையை பராமரிக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தன் நண்பரிடம் அடுத்தவர் குழந்தையை பராமரிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? என கேட்கிறார். அதற்கு அந்த நண்பர் சிரித்துக்கொண்டே நீங்கள் யார் குழந்தையை பராமரிக்கிறீர்கள் எனக்கேட்டார். அதற்கு இவர் நான் என் மாமனாரின் மகளை பராமரிக்கிறேன் என உனக்கு தெரியாதா என கேட்டார். தாம்பத்திய வாழ்க்கை போர் அடிக்கிறது டென்ஷனாக இருக்கிறது என்று கூறுபவர்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக பார்க்க தெரியாதவர்கள். வாழ்க்கையை சுவாரஸ்யமாக பாருங்கள் அப்போது உங்கள் வாழ்க்கை ஜிங்கிலாலா தான். எண்ணம் போல் வாழ்க.