Posts

உங்கள் வியாபாரம் லாபம் தருகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

வல்லுனர்கள் வியாபாரத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா நீங்கள் வியாபாரம் தொடங்கி 36 மாதம் ஆகியும் உங்களுக்கு லாபம் வரவில்லை என்றால் நீங்கள் வியாபாரமே செய்யவில்லை நீங்கள் ஏதோ hobby போல வியாபாரம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். மூன்று வருடம் ஆகியும் லாபம் வரவில்லை என்றால் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். இதை விரைவில் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களிடம் இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வாங்குவதற்கான பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டில் முதலீடு செய்வீர்களா? அல்லது நகையில் முதலீடு செய்வீர்களா? இரண்டுமே 10, 20 வருடங்களுக்கு பிறகு நிறைய பணத்தை நமக்கு சம்பாதித்து தரும். ஆனால் நம் நகையோ நமது பீரோவில் அல்லது பேங்கில் இருக்கும். ஆனால் நாம் வாங்கும் வீடோ நமக்கு வாடகை தரும் அல்லது நாமே அங்கு தங்கிக் கொள்ளலாம். நாம் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி பல விஷயங்களை பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நாம் பேசும்போது யுக்தியுடன் பேச வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கின்றார். அவருடைய மனைவி நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் நான் உன் தந்தையிடம் தான் பேசிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினார். அதற்கு மனைவி நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று கூறியது போல் இருந்தது என்று கேட்டார். உன் தந்தை நான் டூர் போகிறேன் உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்று கேட்டார் அதற்கு நான் வேண்டாம் என்று கூறினேன். மனைவி நீங்கள் என் தந்தைக்கு கிடைத்த வரப்பிரசாதம். என் தந்தை எந்த ஊருக்கு போகிறார் என்று கேட்டார். அதற்கு அவர் திருநெல்வேலிக்கு  என்று கூறினார். உடனே மனைவி திருநெல்வேலியென்றால் அப்பாவை அல்வா கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். அதற்கு கணவர் உன் தந்தை தான் எனக்கு கல்யாணத்திலே  எனக்கு 50 கிலோ அல்வா கொடுத்து விட்டாரே என்று. நாம் பேசும்போது ஜாக்கிரதையாக யுக்தியுடன் பேச வேண்டும். பிரச்சனை வருவது போன்று பேச்சு வார்த்தையை நாமே தொடங்கி வைக்க கூடாது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நமக்கு பத்து, பதினைந்து நிமிடத்தில் மரணம் வரும் என தெரிந்திருந்தும் அப்போதும் மண், பொன், பெண் என மோகம் இருந்தால் நாம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தம். யார் ஒருவர் ஆசையை வென்று உயிரோடு இருக்கிறாரோ அவர் முக்தி நிலை அடைந்தது போன்று ஆகும். அவர் ஒரு மகான் வாழ்க்கை வாழ்கிறார். நாம் ஆசையை வெல்லவில்லை என்றால் நாம் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வந்து கொண்டே இருப்போம். அதனால் நாம் எல்லோரும் ஆசையை வெல்ல முயற்சி செய்யவும். எண்ணம் போல் வாழ்வு.

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

Practice makes man perfect என்பது ஒரு சொல்லாடல் ஆகும். அதாவது நாம் முயற்சி செய்தால் முழுமை அடையலாம் என்று பொருள். ஆனால் இந்த கூற்று தவறாகும். நாம் முயற்சி செய்தால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய முடியும். நாளை மீண்டும் முயற்சி செய்தால் அதை விட சிறப்பாக செய்ய முடியும். ஆனால் என்றும் முழுமை அடைய முடியாது . எப்போது முழுமை தன்மைக்காக முயற்சி செய்கிறோமோ நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆனால் நேற்றை விட இன்று சிறப்பாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் நமக்கு ஊக்கம் உற்சாகம் வருகிறது. எண்ணம் போல் வாழ்வு.

எல்லாம் நம் மனநிலை பொறுத்திருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் ஏழையாக இருப்பதற்கும், மிடில் கிளாஸ் ஆக இருப்பதற்கும், பணக்காரராக இருப்பதற்கும் அவரவர் மனநிலையை காரணம். ஒரு ஏழை தனது மாத செலவுகளை ஈடுகட்ட தான் வேலைக்கு செல்கிறார். ஒரு மிடில் கிளாஸ் நபர் கௌரவமான வாழ்க்கைக்காக உழைக்கிறார். ஒரு பணக்காரர் தனக்கு கிடைக்கும் பணம் மேலும் பணத்தை சம்பாதிக்க வழிமுறைகளை தேடுகிறார், செய்கிறார். எல்லாவற்றிற்கும் நம் மனதிலேயே காரணம் என்பதை நாம் உணர முடிகிறது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் திறமை அங்கீகரிக்கப்படுகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

அடுத்தவருக்கு இருக்கும் திறமை நமக்கு இல்லாத போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. அதேபோன்று நம் திறமையை அடுத்தவர்கள் அங்கீகரிக்காத போதும் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த இரண்டுமே தவறாகும். நாம் திறமை இல்லை என்று புலம்பும் நேரத்தில் அதை விடுத்து திறமை வளர்க்க முயற்சி செய்வோமானால் நன்றாக இருக்கும். அதே போன்று நாம் எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களின் சர்டிபிகேட் காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களை சரி செய்து விட்டால் நம் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.