Posts

Showing posts from April, 2022

நாம் சொல்வதற்கு தான் ஜவாப்தாரி | எண்ணம் போல் வாழ்வு

இன்றைய உலகம் நாம் உண்மை பேசினாலும் பொய் என்று சொல்கிறது. நாம் பொய் சொன்னால் கேலி கிண்டல் என புரிந்து கொள்கிறது. நாம் கேலி கிண்டல் செய்தால் அதை வெறுப்பாக பார்க்கிறது. அப்போது நாம் என்னதான் செய்ய வேண்டும். நாம் சொல்வதற்குத் தான் ஜவாப்தாரி அவர்கள் புரிந்து கொள்வதற்கு அல்ல. நாம் என்றுமே நல்ல உண்மையான வார்த்தைகளையே பேசுவோம். வேறு எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாம் செய்யும் செயல் புண்ணிய கர்மம் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க... | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி அவர் கணவரிடம் நாளைக்கு நம்போ எங்க அப்பா வீட்டுக்கு போறோம் அங்க வந்து நீங்க என் கூட சண்டை போடக்கூடாது. அதுக்கு கணவர் நாம் இருக்கிறது எங்க அப்பா வீட்டுல அது உனக்கு குருக்ஷேத்திரம் மாதிரி தெரியுதா தினசரி என் கூட மகாபாரதப் போர் போடுறியே. தாம்பத்திய வாழ்வில் தம்பதியர் இருவரும் விட்டுக் கொடுக்கும் போதுதான் வாழ்க்கை சுவையாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களைப் பற்றி வெளியில் யார் பேசுகிறார்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு விளக்கின் ஒளி ஆனது பேசுவது கிடையாது அது தன் வெளிச்சத்தின் மூலம் உலகிற்கு ஒளி தருகிறது. அதுபோன்று நம்முடைய நல்ல செயல்கள் வெளியுலகில் பேசப்பட வேண்டுமே தவிர நாம் அதைப்பற்றி தம்பட்டம் அடிக்க கூடாது. எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு அடுத்தவங்க மனசுல இடம் இருக்கா? | எண்ணம் போல் வாழ்வு

அடுத்தவங்க மனசுல பலம் கொடுத்து நுழைய முடியாது. அவங்க விரும்பினால் தான் அவங்க மனசுல நமக்கு ஒரு இடம் கிடைக்கும். நமக்கு அடுத்தவர் மனதில் இடம் இருந்தால் நாம் அவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். உலகத்திலேயே பெரிய பணக்காரர் யார் என்றால் ஊர்  முழுக்க இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அல்ல. யாரொருவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மனிதர்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறாரோ அவர்கள் தான். எண்ணம் போல் வாழ்வு

அடுத்தவங்கள சும்மா பாராட்டி தான் பாருங்களேன் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கார் ஸ்டார்ட் ஆகவில்லை நாலைந்து பேர் சேர்ந்து அந்த காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்கிறார்கள். அதில் ஒருவர் தன் கையை வைக்கிறார் ஆனால் பலம் கொடுக்கவில்லை. அடுத்தவர்கள் இவரும் தள்ளுகிறார் என்று உணர்ந்து காரை ஸ்டார்ட் செய்கிறார்கள். அதேபோல் வாழ்வில் பாராட்ட தகுதி இல்லாதவரை சும்மா ஆவது அவரை பாராட்டி பாருங்களேன் அவர் செயல் இப்போது இரண்டு மூன்று மடங்கு சிறப்பாக இருக்கும். பொய் சொல்லி வாழ்த்தும் போத செயல் வெற்றிகரமாக ஆகும் போது உண்மையில் வாழ்த்தினால்.. எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையில் சவால்கள் ஏன் வருகின்றன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் வாழ்க்கையில் இன்று வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் பல தோல்விகளையும் பார்த்திருக்கிறோம். இன்று நாம் தைரியசாலியாக இருக்கிறோம் என்றால் ஒரு நாள் நாம் பயந்தவர்களாகவும் இருந்திருப்போம். இன்று நாம் சிரிக்கிறோம் என்றால் நாம் பல துக்கங்களையும் தாண்டி வந்து இருப்போம். இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் என்றால் வாழ்க்கையில் சவால்கள் வருவது நம்மை வீழ்த்த அல்ல நம்மை உயர்த்த. எண்ணம் போல் வாழ்வு.

கனவு நினைவாக என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நம் கனவு ஒரு குறிப்பிட்ட தேதியில் நிறைவேற வேண்டும் என்று நினைத்தால் அது லட்சியம். நம் லட்சியம் அடைய இந்த இந்த நாளில் இதை இதை செய்ய வேண்டும் என அட்டவணை வகுத்தால் அது திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதற்காக உழைத்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் வெற்றி பெற லட்சியம் திட்டம் உழைப்பு. இவை மூன்றும் பிரதானமாகும். எண்ணம் போல் வாழ்வு.

கடன் அன்பை முறிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தன் நண்பரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார் அதற்கு அந்த நண்பர் கடன் அன்பை முறிக்கும் என்றார். அதற்கு அவர் பணம் கொடுத்தால் அன்பு முறியாது பணம் கேட்டால் தான் அன்பு முறியும் என்றார். உண்மையில் நாம் பணம் கொடுக்கும் போது நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டுமென்றால் நாம் அவரிடம் போன பிறவியில் வாங்கியிருந்த கடனை இப்போது கொடுக்கிறோம் என்ற புரிதலோடு கொடுக்க வேண்டும். அது திரும்ப வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்றால் மட்டும் கொடுக்கவேண்டும். திரும்பி கொடுத்தார் என்றார் நல்லது. நாம் அடுத்தவரிடம் இருந்து பணம் பெறும் போது திரும்பி கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். சொன்னபடி குறித்த நேரத்தில் திருப்ப கொடுக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

எண்ணம் சொல் என்னும் மாய வலை | எண்ணம் போல் வாழ்வு

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த நேரமும் நம்முடைய பிரச்சனையைப் பற்றி பேசக்கூடாது. அதன் தீர்வு பற்றி மட்டுமே பேச வேண்டும், ஏனென்றால் எண்ணம், சொல், செயல் என்பது தான் வரிசை. எண்ணம் சொல்கிறது, சொல் மீண்டும் அதே எண்ணங்களை உற்பத்தி செய்யும். அதனால் நாம் நம் பிரச்சினையை பற்றி பேசாமல் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நாமும் விசில் அடிக்கலாம்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் சிறப்பாக வாழ பிரஷர் குக்கர் இடமிருந்தும் கூட பாடம் கற்கலாம். பிரஷர் குக்கரின் மேல் weight வைக்கிறோம் கீழே நெருப்பு வைக்கிறோம் ஆனாலும் அது விசில் அடிக்கிறது. அது போல் நம் வாழ்வில் நம்மை சுற்றி பிரச்சினைகள் இருந்தாலும் நாம் நாமும் விசில் அடிக்கலாம், எப்போது என்றால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு நம்மிடமே இருந்தால் அல்லது தீர்வை தெரிந்தவரை நமக்கு தெரிந்தால் அப்போது நாமும் விசிலடித்து வாழ்க்கையை ரசித்து வாழலாம். எண்ணம் போல் வாழ்வு.

நாம் கெத்தாக வாழ என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கெத்தாக வாழ்கிறோம் என்று எப்போது சொல்லலாம் என்றால் நம்மை பார்த்து யாராவது தவறாக சொன்ன போதும் நாம் அவரை சிறிதும் காயப்படுத்தாமல் சிரித்தபடியே அவர் முன்னால் சிறப்பாக வாழ்ந்து காட்டினால் அப்போது சொல்லலாம். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். யாராவது ஏதாவது சொன்னால் அது நம் புருவ மத்தி வரை வரலாம் நல்லதாக இருந்தால் உள்ளே போகலாம் தவறாக இருந்தால் உள்ளே போகக்கூடாது. இந்த சக்தி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் ராஜயோக தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.